உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் நிலைய நிழற்குடை புனரமைக்க பெண்ணாடம் பயணிகள் கோரிக்கை

பஸ் நிலைய நிழற்குடை புனரமைக்க பெண்ணாடம் பயணிகள் கோரிக்கை

பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையை புனரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியாகவும், குறுவட்ட தலைமையிடமாகவும் உள்ளது. இங்குள்ள பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், அரியராவி, பெ.பூவனுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி, சென்னை, அரியலுார் உட்பட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பழைய பஸ் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டது. இதனை பயணிகள் பயனபடுத்தி வெளியூர்களுக்கு சென்றனர். நாளடைவில் நிழற்குடையில் உள்ள இருக்கைகளை சமூக விரோதிகள் பெயர்த்து எடுத்துச் சென்றனர்.போதிய பராமரிப்பின்றி உள்ள நிழற்குடையில் தள்ளு வண்டியில் பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து இடையூறாக நிறுத்துவதால் பயணிகள் அமர முடியாத நிலை உள்ளது.இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் திறந்தவெளியில் கால் கடுக்க நீண்டநேரம் நிற்கும் அவலம் ஏற்படுவது தொடர்கிறது. எனவே, பஸ் நிலைய நிழற்குடை ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி, புனரமைத்து, இருக்கைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ