| ADDED : ஜூன் 19, 2024 01:16 AM
பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு ெஷட் இல்லாமல், மழை வெயிலில் வீணாகி வருகிறது.பண்ருட்டி காந்திரோடு வரதராஜபெருமாள் கோவில் தேர் சீரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு தேரோட்டம் நடந்தது. இந்த ஆண்டிற்கான உற்சவம் கடந்த ஏப்ரலில் நடந்தது. அறநிலைய துறை மற்றும் தனியார் பங்களிப்புடன், பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட் கோவில் தேருக்கு, ெஷட் அமைககப்படவில்லை. இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் வெயில், மழையில் தேர் வீணாகி வருகிறது.எனவே, தேர் நிறுத்த ெஷட் அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.