உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொதுத் தேர்வில் தேர்ச்சி சாதனை; ஜெயப்பிரியா பள்ளிக்கு பாராட்டு

பொதுத் தேர்வில் தேர்ச்சி சாதனை; ஜெயப்பிரியா பள்ளிக்கு பாராட்டு

மந்தாரக்குப்பம் : பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளிக்கு அமைச்சர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.விருத்தாசலம், கோபாலபுரம், திருப்பயர், தொழுதுார், வடக்குத்து, வடலுார் ஆகிய ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. அதையடுத்து, விழாவில் ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.மேலும் வடக்குத்து ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளி மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி