உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறைகேட்பு கூட்டம் நடத்த ஓய்வூதியர்கள் கோரிக்கை

குறைகேட்பு கூட்டம் நடத்த ஓய்வூதியர்கள் கோரிக்கை

கடலுார், : கடலுார் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க 4வது மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.கடலூர் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் நடராஜன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஆதவன் வேலை அறிக்கையையும், பொருளாளர் பத்மநாபன் நிதிநிலை அறிக்கையை வாசித்தனர். மாநில செயலாளர் மனோகரன், துணைத் தலைவர் நாகராஜன், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், மாநில பொதுச் செயலாளர் ரவி பேசினர். நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், துரை, ஞானக்கண் செல்லப்பா, ரவி, ஜமுனா, தமிழரசி, ராதாகிருஷ்ணன், ஞானமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்களின் 50 சதவீதம் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொண்டு ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். கடலுார் மாவட்ட நிர்வாகம், ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் நடத்துவது இல்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி