உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடிந்து விழும் நிலையில் டேங்க் சிறுகிராமத்தில் மக்கள் அச்சம்

இடிந்து விழும் நிலையில் டேங்க் சிறுகிராமத்தில் மக்கள் அச்சம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தில் குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டி பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் ஊராட்சியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டி 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிக்காததால் தொட்டியின் பிரதான கான்கீரீட் துாண்களில் உள்ள இரும்புகள் துருபிடித்து பலமிழந்து வருகிறது.தொட்டியின் அடிபாகத்தில் நீர்கசிவு காரணமாக சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. துாண்கள் துருபிடித்து பலம் இழந்து வருவதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்த பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு அசம்பாவித சம்பங்கள் நடப்பதற்கு முன் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலமிழந்த குடிநீர் தொட்டியை இடித்து புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி