உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லாங்குத்து புதுநகர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கல்லாங்குத்து புதுநகர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடலுார், : நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு வீடுகளை ஒப்படைக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.விருத்தாசலம் அடுத்த கல்லாங்குத்து புதுநகர் நெய்வேலி மாற்றுக்குடியிருப்புபாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;நெய்வேலி கெங்கைகொண்டான் கிராமத்தில் முதலாம் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தியதால் 212 குடும்பங்களின் வீடுகள் எடுக்கப்பட்டது. இதற்கு மாற்றுஇடமாக ஆலடி பாலக்கொல்லை கல்லாங்குத்து கிராமத்தில் வீட்டுமனை இடம்வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் அந்த இடத்தில் வீடு கட்டும் பணி நடந்துதற்போது தான் முடிந்துள்ளது. இந்த வீடுகளை ஒப்படைக்க ஒப்பந்ததாரர்கள் பணம்கேட்டு தொந்தரவு செய்வதுமிட்டுமின்றி, பணம் கொடுத்தால் தான் வீடுஒப்படைக்கப்படும் என மிரட்டுகின்றனர். கலெக்டர், தாசில்தாரிடம் மனுகொடுத்தபோது, பணம் கொடுக்க வேண்டாம் என கட்டளையிட்டனர். ஆனாலும்,எங்களுக்கு வீடு தரவில்லை. வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பதால் கடும் அவதியடைந்து வருகின்றோம். எனவே, எங்களுக்கு வீட்டு சாவடி கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில்பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ