உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருதையில் நிற்க மனு

எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருதையில் நிற்க மனு

விருத்தாசலம் : விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டுமுகமது ஆகியோர் கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாதிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், விரைவில் புதிய மாவட்டமாக உருவாக உள்ள விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனுக்கு நெய்வேலி, பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தினசரி ரயிலில் ஏறிச் செல்கின்றனர்.இந்நிலையில் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, ராமேஸ்வரம், துாத்துக்குடி மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி சென்று வருகின்றனர்.இதில், திருச்சியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர், சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ், சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் நிற்பது இல்லை.எனவே இந்த ரயில்கள் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் பயணிகள் ரயிலை, விருத்தாசலத்தில் இருந்து புறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை