உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லாங்குத்து மக்கள் கலெக்டரிடம் மனு

கல்லாங்குத்து மக்கள் கலெக்டரிடம் மனு

கடலுார்: விருத்தாசலம் கட்டிமுடிக்கப்பட்ட மாற்று குடியிருப்புகளை ஒப்படைக் கோரி, கலெக்டரிடம், கல்லாங்குத்து புதுநகர் பகுதி மக்கள் மனு அளித்தனர்.நெய்வேலி கெங்கைகொண்டான் கிராமத்தில் முதலாம் சுரங்க விரிவாக்கத்திற்கு, 212 குடும்பங்களின் வீடுகள் எடுக்கப்பட்டது. இதற்கு மாற்று இடமாக ஆலடி பாலக்கொல்லை கல்லாங்குத்து கிராமத்தில் வீட்டுமனை இடம் வழங்கப்பட்டது.அ.தி.மு.க., ஆட்சியில் அந்த இடத்தில் வீடு கட்டும் பணி நடந்து தற்போது தான் முடிந்துள்ளது. இந்த வீடுகளை ஒப்படைக்க ஒப்பந்ததாரர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக, பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கலெக்டர், தாசில்தாரிடம் மனு கொடுத்தபோது, பணம் கொடுக்க வேண்டாம் என கூறியும், வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை என, தெரிகிறது. இதனால், வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் என்றும், எங்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை