உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மயான பாதைக்கு தீர்வு கேட்டு ஆர்.டி.ஓ.,விடம் மனு

மயான பாதைக்கு தீர்வு கேட்டு ஆர்.டி.ஓ.,விடம் மனு

திட்டக்குடி : மயானபாதை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., விடம், துறையூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.திட்டக்குடி அருகே துறையூர் கிராமத்தில் மயான பாதை தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்னை இருந்தது.திட்டக்குடி தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிக வழிக்கு அனுமதி பெற்றுத்தந்தனர். அந்த வழியிலும் தற் போது பிரச்னை ஏற்பட் டுள்ளதால், மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை அமைத்து தர அப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, துறையூர் ஊராட்சி தலைவர் அமுதா தலமையில் மக்கள், விருத்தாசலம் ஜமாபந்தியில், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத்திடம் மனு அளித்தனர். அப்போது, கூட்டத்தில் ஒரு பெண் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல், திட்டக்குடி அடுத்த இறையூர் கிராம பொதுமக்கள், தாங்கள் 100ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானம் மற்றும் பாதையை தனியார் ஆலை நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதை மீட்டு தர வேண்டி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை