உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுற்றுலா பயணிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

சுற்றுலா பயணிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் இயற்கையான சூழல் உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகம் வருகின்றனர். வார விடுமுறை நாட்களானசனி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில்குடும்பத்துடன் வந்து ஓய்வெடுப்பதும், கடலில் இறங்கி குளிப்பதுமாக உள்ளனர்.கடலில் சுழல் அலை வந்து செல்வதால், அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஐ.டி., ஊழியர்கள் இங்கு வந்து குளித்தபோது, சுழல் அலையில் சிக்கி, இருவர் உயிரிழந்தனர்.சாமியார்பேட்டை கடலில் அடிக்கடி நிகழும் உயிரிழப்புகளை தடுக்க, புதுச்சத்திரம் போலீசார் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக, அங்கு போலீசார், எச்சரிக்கை விளம்பர பேனர் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ