உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுண்துளை  அறுவை சிகிச்சை  பயிலரங்கம் 

நுண்துளை  அறுவை சிகிச்சை  பயிலரங்கம் 

சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவத் துறை சார்பில் நுண்துளை அறுவை சிகிச்சை பயிலரங்கம் நடந்தது.மகப்பேறு துறை தலைவர் மிருணாளினி வரவேற்றார். துணை முதல்வர் பாலாஜி சுவாமி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் திருப்பதி பயிலரங்கத்தை துவக்கி வைத்தார்.சென்னை ஐ.ஏ.ஜி.இ., அமைப்பைச் சேர்ந்த நுண் துளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிரியா, வனிதா ஆகியோர் 6 நுண்துளை அறுவை சிகிச்சைகளை செய்து காண்பித்தனர். அதன் வீடியோ, அரங்கத்தில் நேரலை செய்யப்பட்டது.டாக்டர் சசிகலா, மருத்துவக் கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் கவியரசன் மற்றும் நுாற்றுக்குள் மேற்பட்ட டாக்டர்கள், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை