உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே அதிகாரிகள் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ரயில்வே அதிகாரிகள் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

கடலுார் : ரயில்வேத் துறை கோரிக்கைகள் தொடர்பாக, கடலுாரில் சம்பிரதாயமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால், கூட்டத்தில் பங்கேற்ற மா.கம்யூ., மற்றும் பொதுநல அமைப்பினர் ஏமாற்றமடைந்தனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய பெயர் மாற்றம், எக்ஸ்பிரஸ் ரயில்களை கடலுாரில் நின்று செல்ல வேண்டும், மயிலாடுத்துறை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிக்க வேண்டும். இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் கடலுார் மா.கம்யூ., கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் நீண்ட காலமாக முன் வைத்து வருகின்றனர்.பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் ரயில்வே நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை.இந்நிலையில், மீண்டும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதையடுத்து, சமாதான பேச்சு வார்த்தை கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ரயில்வேத் துறை சார்ந்த எந்த அதிகாரிகளும் பங்கேற்கவில்லை.கூட்டத்திற்கு பொறுப்பு ஆர்.டி.ஓ., ரவிதலைமை தாங்கினார். கடலூர் தாசில்தார் பலராமன், டி.எஸ்.பி., பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகள் ரயில்வேத் துறையை சார்ந்தது என்பதால் ரயில்வேத்துறை உயர் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வரும் 27 ம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என கூறியதை தொடர்ந்து, கூட்டம் முடிவடைந்தது. இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி