| ADDED : ஜூன் 20, 2024 08:45 PM
கடலுார்: கடலுாரில் மாவட்ட பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.,) பேரவை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். நிர்வாகிகள் கனகராஜ், பச்சையப்பன், ரவி, மாரியப்பன், சங்கர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல், துணை தலைவர் சுப்புராயன் சிறப்புரையாற்றினர்.இதில், புதிய ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். நிலுவையில் உள்ள நலவாரிய பணப்பலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிர்வாகிகள் ராஜ், ராமமூர்த்தி, மணிகண்டன், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.சி.ஐ.டி.யூ., மாவட்ட பொருளாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.