உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவகொழுந்து வார்த்தை மாறமாட்டார் திட்டக்குடியில் பிரேமலதா பேச்சு

சிவகொழுந்து வார்த்தை மாறமாட்டார் திட்டக்குடியில் பிரேமலதா பேச்சு

திட்டக்குடி: கடலுார் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியது:அ.தி.மு.க., தே.மு.தி.க.,கூட்டணி ராசியான கூட்டணி. மக்கள் விரும்பும் கூட்டணி, பழனிச்சாமி ஆட்சியில் சிறந்த திட்டங்களை மக்களுக்கு தந்தார். 2011 வரலாறு மீண்டும் திரும்பும். திட்டக்குடி தொகுதி ஏற்கனவே முரசு வென்ற தொகுதிதான். கேப்டன் கஷ்டப்பட்டு ஆளாக்கினா, முதுகில் குத்திட்டுப்போகிறவர்களை கடவுள் பார்த்துக்குவார். ஆனால், உங்களுக்கு உழைப்பவரை வேட்பாளராக இங்கே நிறுத்தியுள்ளோம். கடலுார் தி.மு.க.,எம்.பி., தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை. எனவே, இங்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துவிற்கு முரசு சின்னத்தில் ஓட்டளியுங்கள்.தொண்டர்கள் பிரசார பீரங்கியாக மாறி முரசு சின்னத்தை வீடாக கொண்டுபோய் சேர்த்து வெற்றியை தேடித்தர வேண்டும். துளசி வாசம் மாறினாலும் மாறும், தவசி வளர்ப்பு பிள்ளை வார்த்தை மாற மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார். அ.தி.மு.க.,கடலுார் மேற்கு மாவட்டசெயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்தமிழ்செல்வன், தே.மு.தி.க., கடலுார் தெற்கு மாவட்டசெயலாளர் உமாநாத், விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி