| ADDED : ஜூலை 24, 2024 07:32 AM
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.எறும்பூர் அரசு பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் ரேணுகாதாஸ் தலைமை தாங்கினார். புவனகிரி பி.டி.ஓ.,க்கள் புனிதா, பழனிசாமிநாதன், மின்துறை உதவி செயற்பொறியாளர் பழனிவேல், தணிக்கை குழு உதவி இயக்குனர் பஞ்சாபிகேசன், ஊராட்சி துணைத் தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராசு, ராணி, சேத்தியாத்தோப்பு குறுவட்ட ஆய்வாளர் ஆனந்தி முன்னிலை வகித்தனர். சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி, தாசில்தார் தனபதி முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.புவனகிரி சுற்றியுள்ள சின்னநற்குணம், பெரியநற்குணம், வீரமுடையாநத்தம், ஆணைவாரி, வளையமாதேவி, மதுவானைமேடு, மணக்காடு உள்ளி 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் மனுக்களை கொடுத்தனர்.