உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

அரசு பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கடந்த கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும் புதுச்சேரி மாநில தேசிய நல்லாசிரியருமான வெற்றிவேல், புதுச்சேரி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மருதவாணன் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினர்.நிகழ்ச்சியில் சி.என்.பாளையம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் நடராஜன், நடுவீரப்பட்டு கூட்டுறவு வங்கி செயலர் சீனுவாசன், மல்லிகா டெக்ஸ் சண்முகவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தரணிதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை