உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நீதிமன்றம் முன், தி.மு.க., மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் இண்டியா கூட்டணி வழக்கறிஞர்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், ரவிச்சந்திரன், சுப்ரமணியன், செந்தில்குமார், கருணாநிதி, காங்., அசோக்குமார், மணிகண்டன், வி.சி., வழக்கறிஞர் அணி காந்தி, தன்ராஜ், மதுசூதனன் வீரப்பன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், தி.மு.க., வழக்கறிஞர்கள் சாவித்திரி, கருணாநிதி, செந்தில்குமார், ஜெயராஜ், முனுசாமி, அப்துல்லா, மோகன், ரகுநாதன், சுரேஷ்குமார், ராமு, வடிவேல், சரவணன், வினோத், கிஷோர், பிரபா, குணசேகரன், அருண் உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியது, சட்ட திருத்தத்தை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ