உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

கடலுார் : கடலுாரில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.மத்திய அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக மக்கள் குறைவு மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். எச்.யூ.டி.சி.ஓ., திட்ட சென்னை மண்டல முதன்மை அலுவலர் சிவசங்கர் வரவேற்றார். திட்ட இயக்குனர் சபிதா போஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 72 பேருக்கு ரூ. 33.58 லட்சம் மதிப்பில் பேட்டரி வீல் சேர், காது கேட்கும் கருவிகள், நடைப்பயிற்சி சாதனம் போன்றவை வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டு, மத்திய அரசு திட்டத்தின் மூலம் கடலுார் மாவட்டத்தில் ரூ.1.69 கோடியில் 1,558 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை