உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.கடலுார் மாவட்டத்தில், நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 28 ஆயிரத்து 518 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 26 ஆயிரத்து 911 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரி படிப்பிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதியாக மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது.அதன்படி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், நேற்று முன்தினம் முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் பெற பள்ளிகளில், மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் ஆர்வமாக குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை