உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூரண மதுவிலக்கு அமல்படுத்த பொது நல கூட்டமைப்பு கோரிக்கை

பூரண மதுவிலக்கு அமல்படுத்த பொது நல கூட்டமைப்பு கோரிக்கை

கடலுார், : பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென, மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி அனுப்பியுள்ள மனு: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதுபோன்ற சம்பவங்கள் மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் நடந்துள்ளது.தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் எங்கும் சாராயக் கடைகள் காணப்படுகிறது. குறைந்த விலைக்கு பாக்கெட் சாராயம் விற்பனையாகிறது. கள்ளத் தனமாக உற்பத்தி செய்யப்படும் சாராயத்தில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு விஷ சாராயமாகிறது என்ற அபாயம் தெரியாமல் குடித்து உயிர் இழப்பது தொடர்கதையாக உள்ளது.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி