உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதிய உணவில் பூரான் 25 மாணவியர் மயக்கம் சிதம்பரம் அருகே பரபரப்பு

மதிய உணவில் பூரான் 25 மாணவியர் மயக்கம் சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரம்:சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 90 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு நேற்று மதியம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. அதில் ஒரு மாணவியின் சாதத்தில், பூரான் இறந்து கிடந்ததை கண்டு ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அதே நேரத்தில் உணவை சாப்பிட்ட சில மாணவியருக்கு மயக்கம் ஏற்பட்டது.அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், மயக்கமடைந்த மாணவியர் 5 - 13 வயதுடைய 25 பேரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் அனைவரும் மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ