| ADDED : ஜூலை 15, 2024 02:25 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, மீண்டும் மஞ்சள் பை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் வரி வசூல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருத்தாசலம் நகராட்சி அலுலகம் முன் விழிப்புணர்வு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார்.சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஷகிலாபானு, களப்பணி உதவியாளர் செங்குட்டுவன் மற்றும் துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், சிவசக்தி கலை குழுவினர் பங்கேற்று மங்கள இசை வாத்தியம் முழங்க, விழிப்புணர்வு பாடல்களுடன் கரகாட்டம் ஒயிலாட்டம் போன்ற நடனங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.அதேபோல், பஸ் நிலையம், பாலக்கரை, சன்னதி தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், ஆலடி முடக்கு, காய்கறி மார்க்கெட், கோர்ட் பகுதியில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.