பண்ருட்டி காந்தி சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி காந்தி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பண்ருட்டி நகராட்சி காந்தி சாலையில், தட்டாஞ்சாவடி துவங்கி, டைவர்ஷன் ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. நகராட்சி கட்டட ஆய்வாளர் கோகுலேஸ்வரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடை, வீடு கட்டியிருந்தவர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருந்த கடை வீடுகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு பிறகு, காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் விசாலமாக காட்சியளித்தது.