உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம் 

மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம் 

கடலுார்: சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது.பணிமனை செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். தேவராசு, கதிர்வேல், பாவாடைசாமி, திணேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.பழனிவேல் வரவேற்றார். மண்டல பொதுச் செயலாளர் மணிமாறன், செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கோபிநாதன், குமரவேல், முத்துக்குமாரசாமி, லட்சுமணன், தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.15வது ஊதிய பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தொழில் நுட்ப செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை