உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய கால்நடை மருந்தக கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

புதிய கால்நடை மருந்தக கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

நடுவீரப்பட்டு, : சி.என்.பாளையம் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்தில் நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த கால்நடை மருந்தக கட்டடம் மிகவும் பழுந்ததடைந்த நிலையில் இருந்தது.இதனால் கடந்த ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ்ரூ.58.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தற்போது கட்டடம் கட்டும் பணி முடிந்ததுள்ளது. இந்த புதிய கட்டடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ