உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாழநல்லுார் தார் சாலை அகலப்படுத்த கோரிக்கை

தாழநல்லுார் தார் சாலை அகலப்படுத்த கோரிக்கை

பெண்ணாடம்: பெண்ணாடம் - தாழநல்லூர் செல்லும் தார் சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடத்தில் இருந்து கோனுார் வழியாக தாழநல்லூர் செல்லும் தார் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, வேன் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இச்சாலையை பயன்படுத்தி திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், கோனூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் எதிரே வாகனங்கள் வரும் போது வழிவிட முடியாத நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகனங்கள் சாலையோர பள்ளங்கள் மற்றும் விளைநிலங்களில் சிக்கி கவிழும் அபாயம் உள்ளது.எனவே, தாழநல்லுார் தார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை