மேலும் செய்திகள்
செம்மேடு கெடிலம் ஆற்று பாலம் உடைந்தது
04-Dec-2024
பண்ருட்டி : பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றல் நண்பர்களுடன் குளிக்க சென்று சிக்கிய மாணவர் உடலை காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அகிலன்,15; அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில் விடுமுறையில் மாடு மேய்த்துக்கொண்டு நண்பர்களுடன் கெடிலம் ஆற்றில் குளித்தார். அப்போது திடீரென ஆழமான பகுதியில் அகிலன் சிக்கி நீரில் முழ்கினார். உடன் சக நண்பர்கள் கூச்சலிட்டனர். தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கெடிலம் ஆற்றில் தேடினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடும் பணியை துவக்கினர்.நீண்ட நேரத்திற்கு பின் உயிரிழந்த நிலையில் அகிலன் உடலை மீட்டனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Dec-2024