உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வு பெற்ற ஊழியர்கள் தவியாய் தவிப்பு

ஓய்வு பெற்ற ஊழியர்கள் தவியாய் தவிப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில், கடலுார் மாவட்டத்தில் கடந்த 2022 டிசம்பர் முதல் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், டிரைவர், கண்டக்டர்கள் ஓய்வு பெற்றனர். இவர்களின் பணி ஓய்வின் போது வருங்கால வைப்பு நிதி, கருணைத்தொகை, ஈட்டிய விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வருமானத்தில் மாதம் மாதம் பிடித்த செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கான தொகை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 10 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததும் கண்டிப்பாக வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொண்ட பின்பும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணபலன்கள் கிடைக்காததால் ஊழியர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ