உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூவராக சுவாமி கோவிலில் ரூ.6.45 லட்சம் உண்டியல் வசூல்

பூவராக சுவாமி கோவிலில் ரூ.6.45 லட்சம் உண்டியல் வசூல்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் உண்டியலில், 6 லட்சத்து 45 ஆயிரத்து 32 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.கோவில் உண்டியல் திறக்கப்பட்டு நேற்று காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், சரக ஆய்வாளர் சுபாஷினி, செயல் அலுவலர் கருணாகரன் தலைமையில் எண்ணப்பட்டது. இதில், 6 லட்சத்து 45 ஆயிரத்து 32 ரூபாய் ரொக்கம், 35 கிராம் தங்க நகை, 47 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், ஊழியர் மூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !