உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

விருதையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம், : விருத்தாசலத்தில், மாயன பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, கிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் அருந்ததியினர் மக்கள் மயானத்திற்கு செல்லும் பொதுபாதையில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், கிராம மக்கள் நேற்று, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை