உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை

ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை

விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை அமோகமாக நடந்தது.விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பழமை வாய்ந்த நகைகள், கேரளா ராஜ்கோட், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு டிசைன்களிலும், எடை குறைந்த வடிவங்களிலும் ஏராளமான நகைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப புதுப்புது டிசைன்களில் இருந்த நகைகளை தேர்வு செய்து, மகிழ்வுடன் வாங்கிச் சென்றனர். வெள்ளிப் பொருட்களுக்கு என பிரத்யேக தனிப்பிரிவும் செயல்பட்டது. மேலும் உலகத்தரம் வாய்ந்த ெஹச்.யு.ஐ.டி., சான்றிதழ் பெற்ற நகைகள் என்பதால், வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ராஜா ஜூவல்லரி நிறுவனர் குமார், அர்ச்சனா குமார், அபிநவ்குமார் ஆகியோர் வாடிக்கையாளர்களை வரவேற்று, நகைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை