உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சசிகலா ஆதரவு போஸ்டர் மாவட்டத்தில் பரபரப்பு

சசிகலா ஆதரவு போஸ்டர் மாவட்டத்தில் பரபரப்பு

சசிகலா தலைமையில் ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதற்கான பிரசாரத்தில் ஈடபட சசிகலா முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போதைய அ.தி.மு.க.,வில் ஓரம் கட்டப்பட்ட சீனியர், ஜூனியர் உள்ளிட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக காய் நகர்த்த துவங்கியுள்ளனர்.அதன் ஒரு கட்டமாக கடலுார் மாவட்டம் - அ.தி.மு.க., என்ற பெயரில் நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. இது, கடலுார் மாவட்ட அ.தி.மு.க., வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி