உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடராஜர் கோவிலில்  செங்கோல் தினம்

நடராஜர் கோவிலில்  செங்கோல் தினம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று செங்கோல் தினத்தையொட்டி, பொது தீட்சிதர்கள் சார்பில் பதிகம் பாடி, தர்மம் நிலைக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது.இந்திய லோக்சபாவில், கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி செங்கோல் நிறுவப்பட்டது. அதனையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில், பொது தீட்சிதர்கள் சார்பில் செங்கோல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கோவிலின் முன்பு, நந்தி அமர்ந்திருக்கும், செங்கோலுக்கு பட்டுவஸ்திரம் கட்டி மாலை சாற்றி, கோளறு பதிகம் பாடப்பட்டது. தொடர்ந்து எங்கும் தர்மம் நிலைக்க வேண்டும் என, தீட்சிதர்கள் உறுதி மொழி ஏற்றனர். பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ