உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொன்னங்கோவில் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

பொன்னங்கோவில் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றியம் பொன்னங்கோவில் ராசாம்பாள் ஆச்சி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை சேர்மன் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை அபிராமவல்லி வரவேற்றார். ஊராட்சி தலைவர் நடராஜன், பி.டி.ஓ.,க்கள் மோகன்ராஜ், ஆனந்தன், வட்டார கல்வி அலுவலர் மணிவாசகம் முன்னிலை வகித்தனர். கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், காலை உணவுத்திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து கல்வி வளர்ச்சி தினம் கொண்டாடினர்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தேவசேனா, விஜயலட்சுமி, ரமேஷ்சங்கர் மற்றும் பெற்றோர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை