மேலும் செய்திகள்
கடலில் மூழ்கி மாணவர் மாயம்
03-Mar-2025
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே கடலில் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட, மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.வடலுார் அடுத்த பார்வதிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அன்புச்செல்வன், 17; குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், தனது நண்பர்களான ராசாக்குப்பம் செல்வா, 17; மீனாட்சிப்பேட்டை ஜெயக்கிருஷ்ணன், 17; குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் இரணியராஜ்,17; தம்பிப்பேட்டை ரவிராயர், 17; ஆகியோருடன் பெரியக்குப்பம் கடலில் நேற்று குளித்தனர்.அப்போது ராட்சத அலையில் சிக்கி அன்புச்செல்வன், செல்வா, ஜெயக்கிருஷ்ணன் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்தவர்கள் செல்வா மற்றும் ஜெயகிருஷ்ணன் இருவரையும் மீட்டு, திருச்சோபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்புச்செல்வனை காணவில்லை. தகவலறிந்த கடலுார் தீயணைப்பு துறையினர், தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
03-Mar-2025