உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆறுமுக நாவலர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

ஆறுமுக நாவலர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

சிதம்பரம் : சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த, மாணவர்கள் பங்கேற்ற கண்காட்சிக்கு, ஆறுமுக நாவலர் பள்ளி குழு தலைவர் சேது சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் அருள்மொழிச்செல்வன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் இயந்திர மனிதன், எரிமலைகள், காற்று அழுத்த மூலம் விமானம் மேல் நோக்கிச்செல்லுதல், சூரிய குடும்பம், சாலை விதிகள், கைவினைப் பொருட்கள், இந்தியா வரை படம் போன்றவை கண்காட்சிப்பட்டிருந்தது.சிதம்பரம் ரோட்டரி சங்க செயலாளர் பாலாஜி மற்றும் பலர் காண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ