உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் தரிசன விழாவிற்கு பாதுகாப்பு: தீட்சிதர்கள் மனு

சிதம்பரம் தரிசன விழாவிற்கு பாதுகாப்பு: தீட்சிதர்கள் மனு

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவிற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, கலெக்டர் மற்றும் எஸ்.பி., க்கு, தீட்சிதர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவில் தீட்சிதர்களின் செயலர் வெங்கடேச தீட்சிதர் அனுப்பியுள்ள மனு:சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் போது, நடராஜர் கோவில் குறித்த 17.05.2022 தேதியிட்ட அரசாணை எண்.115ஐ அமல்படுத்துவதற்கு, அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டு முறைக்கும், பொது தீட்சிதர்களின் பாரம்பரியமான பூஜைக்கு இடையூறு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.கோவில் விழாவை சுமூகமாக நடத்துவதையும், தீட்சிதர்களின் மத செயல்பாடுகளை பாதுகாக்கவும் காவல்துறைக்கு, சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஆனித் திருமஞ்சன தேர் மற்றும் தரிசனம் நடைபெறும் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய இரு நாட்கள், நடராஜர், சித்சபையில் இருந்து வெளியில் வந்து விடுவதால், கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய இயலாது.மேலும் தரிசனத்திற்கு பிறகு சித்சபைக்கு எழுந்தருளிய நடராஜருக்கு, விசேஷ பூஜைகள் பாரம்பரியாக நடந்து வருவதால், 10ம் தேதி முதல், 13 வரையில், கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய முடியாது.எனவே பக்தர்களின் அமைதியான தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்