உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செங்கழனீரம்மன் கோவிலில் செடல் விழா துவங்கியது

செங்கழனீரம்மன் கோவிலில் செடல் விழா துவங்கியது

விருத்தாசலம்: விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவிலில், ஆடி மாத செடல் திருவிழா துவங்கியது.விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், 42வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 21ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 7:30க்கு மேல், 9:00 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக, நாளை மாலை 5:00 மணியளவில், திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவு புஷ்ப பல்லக்கில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வரும் ஆகஸ்டு 2ம் தேதி காலை மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், செடலணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் காலை மஞ்சள் நீர் உற்சவம், மணிமுக்தாற்றில் இருந்து கஞ்சிக்கலயம் சுமந்து வரும் நிகழ்வு நடக்கிறது.4ம் தேதி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை