உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூத்தோர் தடகள போட்டி : கடலுார் வீரர்கள் வெற்றி

மூத்தோர் தடகள போட்டி : கடலுார் வீரர்கள் வெற்றி

கடலுார் : ைஹதராபாத்தில் நடந்த அகில இந்திய மூத்தோர் தடகள போட்டியில் கடலுார் மாவட்ட வீரர்கள் பரிசு பெற்றனர்.ஹைதராபாத்தில் அகில இந்திய அளவில் மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், கடலுார் மூத்த குடிமக்கள் அமைப்பு தலைவர் தர்மலிங்கம் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதல், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதலில் ஓய்வு பெற்ற பேராசிரியர் நடராஜன் முதலிடமும், ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும் பிடித்தார்.ஓய்வு பெற்ற காவலர் பவானி வேக நடை, ஓட்டப் பந்தயத்தில் முதலிடம், நீளம் தாண்டுதல், தத்தி தாவுதலில் இரண்டாமிடம், ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம்பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மூத்தோர் தடகள அமைப்புமாவட்ட செயலாளர்பாலசுந்தரம், துணைத்தலைவர் திருமலை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ