உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் குவித்து வைத்த மண்: அகற்றுவதில் அலட்சியம்

சாலையில் குவித்து வைத்த மண்: அகற்றுவதில் அலட்சியம்

கடலுார் : கடலுாரில் பிரதான சாலை சென்டர் மீடியனில் குவித்து வைத்த மண்ணை அகற்றுவதில் ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் மாநகரத்தின் பிரதான போக்குவரத்து பகுதியாக பாரதி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலையின் சென்டர் மீடியன் இருபுறங்களிலும் மண் அதிகளவில் குவிந்துள்ளது.இதேபோன்று நெல்லிக்குப்பம் - பண்ருட்டி சாலையில் சாவடி வரை சென்டர் மீடியனில் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது மண் பறந்து கண்களில் விழுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், பாரதி சாலையில் உள்ள சென்டர் மீடியனில் குவிந்த மண்ணை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அங்கேயே ஓரமாக குவித்து வைத்துள்ளனர். இதுவரை அந்த மண் அகற்றப்படாததால் மீண்டும் மண் பறந்து வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.எனவே, சாலையில் குவிந்துள்ள மண்ணை முழுதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி