உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கடலுார்: கடலுார் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கடலுார் கூத்தப்பாக்கத்தில் நடந்த முகாமிற்கு, இணை ஆணையர் பரணிதரன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதில், மருத்துவ குழுவினர் கடலுார், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்தனர்.அப்போது, கோவில் செயல் அலுவலர்கள், சரக ஆய்வாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாம், இன்று குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி தாலுகாவிற்கும், நாளை அரியலுார் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் பணியாளர்களுக்கும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை