உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கனிமவள கொள்ளையை மறைத்த தனிப்பரிவு போலீஸ்காரர் மாற்றம்

கனிமவள கொள்ளையை மறைத்த தனிப்பரிவு போலீஸ்காரர் மாற்றம்

-நமது நிருபர்-விருத்தாசலம் அருகே நடந்த கனிமவள கொள்ளையை மறைத்த தனிப்பிரிவு போலீஸ்காரர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு கிராமத்தில் தனிநபர் ஒருவர் அதிகாரிகள் துணையுடன் கனிம வள கொள்ளையில் ஈடுபடுவதாக, விருத்தாசலம் பகுதியில் கடந்த 20ம் தேதி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.இந்த போஸ்டரை, சின்னகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஒட்டியதாக நினைத்து, கூலிபடையினர் அவரை பின் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.இதில் ஆத்திரடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், கிராம மக்கள் கடந்த 21ம் தேதி விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நடியப்பட்டு கிராமத்தில் நடந்த கனிமவள கொள்ளை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத, ஆலடி போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜசேகர், ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை