உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை

மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் குழந்தைசுவாமி சித்தருக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தைசுவாமி சித்தருக்கு நேற்று ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு சிறப்பு யாகபூஜைகள் நடந்தது.அதனை தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து,யாகபூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது.மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ