கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் விளையாட்டு போட்டி
கடலுார்: கடலுார் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், கடலுார் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடந்தது. போட்டியை கடலுார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்நாத் துவக்கி வைத்தார். வாலிபால், கயிறு இழுத்தல், 100 மீட்டர் ஓட்டம், சிலம்பம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.தொழிற்பயிற்சி நிலைய விடுதி கண்காணிப்பாளர்கள் மற்றும் பயிற்சி அலுவலர்கள் வெங்கடாஜலபதி, சங்கர் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை நடத்தினர்.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் தெய்வசிகாமணி பங்கேற்று பரிசு வழங்கினார். நேரு யுவகேந்திரா ஓய்வுபெற்ற அலுவலர் சக்கரவர்த்தி, ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். தேசிய இளையோர் தொண்டர்கள் கமல்ராஜ், லதா, மேனகா,சாந்தப்பிரியா, விஷால்,வசந்தராஜா விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேசிய இளையோர் தோண்டர் மேனகா நன்றி கூறினார்.