உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெருவிளக்கு அமைப்பு

தெருவிளக்கு அமைப்பு

நெல்லிக்குப்பம், : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நெல்லிக்குப்பம் எஸ்.எல்.நகரில் தெருவிளக்கு அமைக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் நகராட்சி எஸ்.எல்.நகரில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1,500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, தெரு விளக்குள், சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க நகராட்சிக்கு உரிய பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், சாலை வசதி மட்டும் செய்யப்பட்ட நிலையில், தெருவிளக்கு வசதி இல்லாமல், மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் அதிகரித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் ஆகியோர் உத்தரவின்பேரில் எஸ்.எல்.நகரில் தெருவிளக்குள் போடப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ