உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி அரசுக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

திட்டக்குடி அரசுக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024--25ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு நேற்று துவங்கியது.திட்டக்குடி அரசுக்கல்லுாரி முதல்வர்(பொ) ராஜசேகர், தலைமையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. சேர்க்கைக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் பொன்னுசாமி, ராஜூ, இளவரசி ஆகியோர், மாணவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர்.முதல்நாள் கலந்தாய்வில் பங்கேற்ற 150மாணவர்களில் 56பேர் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டனர். கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள் விஜயபாரதி, ஜெகதீஸ்அமல்ராஜ், பிரகாஷ் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் உடனிருந்தனர். இன்று 14ம் தேதி, பி.எஸ்.சி.,கணிதம், விலங்கியல், பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,) பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வும், நாளை 15ம் தேதி, இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ