உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்  மாணவர்கள் விழிப்புணர்வு

மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்  மாணவர்கள் விழிப்புணர்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், வேளாண் கல்லுாரி மாணவர்கள் சார்பில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பெரம்பலுார் தந்தை ரோவர் வேளாண் கல்லுாரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன இறுதியாண்டு மாணவர்கள் சார்பில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பழனிசாமி, அசோக்குமார் வரவேற்றனர்.வேளாண் மாணவர்கள் ராகுல், ரோஷன், ராஜராஜன், ராஜசேகர், ரஞ்சித், சதாசிவம், சக்திவேல், சஞ்சய், ராகுல், சரவணன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகளிர் போலீசாரிடம் தண்ணீரின் அவசியம், மழைநீர் சேமிப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.இதேபோல், நகரில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் சண்முகம் பரிசு வழங்கினார். தொடர்ந்து, பொது மக்களுக்கு தண்ணீரின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !