உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

சிதம்பரம்: சிவபுரி அரசு பள்ளி மாணவர்கள் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தை பார்வையிட்டு காவலர்களின் பணிகள் குறித்து அறிந்துகொண்டனர்.சிதம்பரம் அடுத்த சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 45 மாணவ, மாணவிகள் முழுமையான,காக்கி சீருடையில் காவல் நிலையத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.காவல் நிலையம் வந்த மாணவர்களை இன்ஸ்பெக்டர் கல்பனா, சப் இன்ஸ்பெக்டர் லெனின், மாணவர்களை வரவேற்று, காவலர்களின் பணிகள் குறித்தும் பாதுகாப்பு அலுவல்,பராமரிக்கப்படும்பதிவேடுகள்,எப். ஐ. ஆர்., போடுவது குறித்தும் விளக்கினர். மேலும், போதை இல்லாத இளைய சமுதாயம் வர வேண்டும் என, அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ