உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடைக்கால பயறுகள்: மேலாண்மை பயிற்சி

கோடைக்கால பயறுகள்: மேலாண்மை பயிற்சி

விருத்தாசலம் : ஊத்தங்கால் கிராம விவசாயிகளுக்கு கோடைக்கால பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்களில் அழுத்த மேலாண்மை பயிற்சி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண்துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் காயத்ரி, கலைச்செல்வி ஆகியோர் வேளாண் துறை சார்பில் அரசு வழங்கும் மானியங்கள், நீர் மேலாண்மை, வேளாண் வளர்ச்சிக்குழு பயன்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.துணை வேளாண் அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை