உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தச்சக்காடு அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

தச்சக்காடு அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 5 லட்சம் மதிப்பில் கம்ப்யூட்டர் டேபிள், சேர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார்.டேபிள், சேர்களை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, வசந்தி சுதந்திரதாஸ், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், சாமியப்பன், ராமையன், சுப்ரமணியன், வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ